மகாளய அமாவாசை - செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, சக்தி வாய்ந்தவை, சந்ததி சிறக்கச் செய்யும் நாட்களாக அமைந்திருப்பவை. மகாளய அமாவாசை முக்கியமான அமாவாசைகள் : தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளில், நாம் செய்யும் பித்ரு வழிபாடானது நம்மை சீரும் சிறப்புமாக வாழவைக்கும். முன்னோர்களின் பரிபூரண ஆசியை நமக்கு வழங்கும். யாரெல்லாம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும்: மகாளய அமாவாசை என்பது நம் தாய், தந்தையர் மற்றும் அவர்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் தர்ப்பணம் கொடுப்பது அல்ல. வழிவழியாக நம் வம்சத்தில் இறந்தவர்களை தான் முன்னோர்கள் என்று அழைக்கிறோம். அது எந்த உறவாக இருந்தாலும் சரி. நம் குடும்பத்திற்கு ரத்த பந்தம் உள்ள உறவுகள் தான் ஆத்மாக்களாக இருந்தாலும் நமக்கு நன்மைகளை செய்ய முடியும். அத்தகையவர்களை வழிபடும் ஒரு சிறந்த நாளாக நாளைய நாள் அமைந்துள்ளது. மகாளய அமாவாசை...