பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. 5 ஜாதக தோஷங்கள்: 1. செவ்வாய் தோஷம் 2. ராகு/கேது தோஷம் 3. மாங்கல்ய தோஷம் 4. சூரிய தோஷம் 5. களத்திர தோஷம் 1. செவ்வாய் தோஷம்: ஒருவரின் ஜாதக கட்டத்தில், லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம். 2. ராகு - கேது தோஷம்: லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும். 3. மாங்கல்ய தோஷம்: இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8ஆம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ஆம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8ஆம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி. 4. சூரிய தோஷ...