அருள்மிகு வீரபத்திர சுவாமி திருக்கோயில் தல வரலாறு: தட்சனை சம்ஹாரம் செய்த வீரபத்திரர் வெற்றிலை கொடியுடன் கூடிய இத்தலத்தில் வந்தவுடன் அவருக்கு அமைதி ஏற்பட்டது. வெற்றிலை வாசனை அவருக்கு அமைதியை கொடுத்தது. அன்று முதல் வெற்றிலை மாலை அவருக்கு பிடித்த பொருளாக மாறியது. இத்தலத்தில் வீரபத்திரர் கோபம் தணிந்து சாந்த மூர்த்தி ஆனவுடன் தாட்சாயினி பார்வதி தேவி அவர் முன்பு தோன்றி தன் வளர்ப்பு தந்தையின் அறியாமையை மன்னித்து அவரை உயிர்பெறச் செய்யுமாறு வேண்டியவுடன் வீரபத்திரர் தட்சனை உயிர் பெறச் செய்தார். தட்சன் தன் தவறை வீரபத்திரரிடம் மன்னிக்கும்படி வேண்டி சாம வேதங்களைச் சொல்லி வீரபத்திரரை சிவபெருமான் மனம் மகிழச் செய்தவுடன் வீரபத்திரர் தட்சனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க தட்சன் தன் மகள் தாட்சாயணியின் திருமண வைபவத்தைத்தான் காண வேண்டும் என்று கேட்க வீரபத்திரர் வரும் பங்குனி உத்திர நாளிலே தாட்சாயினியைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார் . தாட்சாயினி தன் வளர்ப்பு தங்தைக்கே அபயம் கொடுத்ததால் அன்று முதல் அபயாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள் . ஒரு பங்குனி உத்திர நன்நாளில் முக்கோடி த...