மேஷ ராசி அன்பர்களே : சார்வரி புத்தாண்டானது தனுசு ராசியில் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆண்டு பிறப்பதால் நீங்க எதிர்பாராத பணவரவு அமையும். தொழிலில் நிம்மதி கிடைக்கும் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். பணிச்சுமை குறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பணம் வங்கியில் சேமிக்கும் வாய்ப்பு உண்டாகும். நீங்க செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்க உழைப்பிற்கு ஏற்ற பலன் தேடி வரும். உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு மேலோங்கும். வசதி வாய்ப்புகளை தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு அமையவுள்ளது. மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். பிரச்சார பயணங்களை பாதுகாப்பாக செய்யுங்கள். உணவு விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். அதிகமாக கடன் வாங்கி பிரச்சினைகளில் மாட்டிவிடாதீர்கள். மேஷம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்' மேஷ ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்: முருகன் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நாள்: செவ்...