ஆந்திர மாநிலத்தில் சிறப்பு திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். நாம் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று நினைத்தால் நேராக திருமலை மீது உள்ள பெருமாளை தரிசிப்பது வழக்கம். ஆனால் பெருமாளை தரிசிப்பதற்கு முன் வேறு சில கடவுள்களை வணங்கிய பிறகு திருமாலை வழங்கவேண்டுமென ராமானுஜர் வகுத்துள்ளார். முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜப் பெருமாளை வணங்க வேண்டும். அதன்பிறகு அலமேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை வணங்கி அருள் பெற வேண்டும். மூன்றாவதாக வராக தீர்த்தக்கரையில் உள்ள வராக மூர்த்தியை தரிசிக்க வேண்டும். அதன் பிறகுதான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றி வணங்கினால் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இந்த வழிமுறையை நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த வழிமுறை இராமானுஜர் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. திருப்பதியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் தலக்கோணம் நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி ஆந்திராவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 270 அ...