தன்னை எதிர்பவர்களின் பலத்தை பாதியை கிரகித்துக்கொள்ளும் வலிமை படைத்த பராக்கிரமசாலியான வாலி, இந்தத் தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளர். வாலி தன்னுடைய வேண்டுதலுக்காக வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கோயில் சிறப்பு இத்திருக்கோயில் 1300 வருடங்களுக்கு பழைமையான திருக்கோயில் ஆகும். அருள்மிகு வாலீசுவரர் கிழக்கு முகமாக நோக்கியும், அம்பாள் அருள்மிகு பெரிய நாயகி என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றனர். வாலி பெருமானை வடக்கு நோக்கி பூஜிக்கிறார். மகிழ மரம் தல விருட்சமாகவும், தீர்த்தம் வாலி தீர்த்தம் எனவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயில் அருள்மிகு பஞ்சலிங்கம் உள்ளது தனிச்சிறப்பு. மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்று. வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சுப்பிரமணியர் கிழக்கு முகம் நோக்கி அருள்பாலிக்கிறார். பஞ்சலிங்க சன்னதியின் கோபுரமானது, காசி விஸ்வநாதர் ஆலையத்தில் கோபுர அமைப்பில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதி...