ஜாதகத்தில் இருக்கக்கூடிய கண்டங்களை நீக்கி, நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த பரிகாரமும் மந்திரமும். இந்த மந்திரத்தை 1 முறை உச்சரிப்பவர்களுக்கு ஆயுசு 100
யாருக்குத்தான் வாழ்க்கையில், ஆரோக்கியமாக 100 ஆயுளுடன் வாழ்வதற்கு ஆசை இருக்காது. நம்முடைய ஆரோக்கியத்தில் எந்த ஒரு குறைபாடும் ஏற்படாமல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆன்மீக ரீதியான சில குறிப்புகளையும், நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஒரு அற்புதம் வாய்ந்த மந்திரத்தை பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றாலும் உங்களுக்காக இந்த மந்திரத்தை உச்சரித்து, இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை உங்களுடைய குழந்தைகள் உங்களுடைய கணவர் உங்களுடைய உறவினர்களில் யாராவது நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்தும் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சிலபேருக்கு ஜாதக கட்டத்திலேயே கண்டம் இருக்கும். ஆயுசு குறைவு என்று இருந்தாலும் அவர்களுக்காக இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக நீங்கள் யாருக்காக வேண்டி வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்திற்க்கு முதலில் நமக்கு தேவையான பொருட்கள் தர்பை புல் 1, சித்தரத்தை 1 சிறிய து...