மிதுனம் ராசி அன்பர்களே : சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மிதுன ராசிக்காரர்களான உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. அஷ்டம சனி உங்களை ஆட்டி வைக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினையை உண்டுபண்ணலாம் எனவே குடும்பத்தில் விட்டுக்கொடுத்து வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறமை வெளிப்படும். பதவி உயர்வும் எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றமும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பாலினத்தாரோடு நட்புக்கொள்வதில் கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் செய்யாத தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். பேச்சில் கவனத்துடன் இருங்கள். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள் காப்பாற்ற முடியாம போயிரும். இந்த ஆண்டு உங்களுக்கு வருமானத்தை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு பண்ணுங்க. அவசரகால நெருக்கடிகள் தீர கொஞ்சமாவது பணத்தை சேமியுங்கள் கஷ்டங்கள் குறையும். மிதுனம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் மிதுன ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்...