Skip to main content

Posts

Showing posts with the label sabarimala-ayyappan

சபரிமலை விரத முறைகள்

சபரிமலை புனிதப்பயணம் : புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 48 நாட்கள் ‎கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் ‎கொள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட ‎சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். ‎அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் ‎பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, ‎பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் ‎வார்த்தைகளை தவிர்த்தல், மேலும் தலை முடி மற்றும் ‎முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க ‎வேண்டும், மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் ‎கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் ‎கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். ‎மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள ‎பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது ‎விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய ‎நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், ‎மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு வருகின்றனர். பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட...

சபரிமலை ஐயப்பன்

சபரிமலை வரலாறு: சபரிமலை (Sabarimala), என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது.  மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம். சபரிமலை வழிபாட்டு மரபு: ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.[2] உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் ‎சபரிமலையே ஆகும். ...