யாருக்கு எந்த விரதம் இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் பொழுது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது?
யாருக்கு எந்த விரதம் இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் பொழுது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது? விரதம் இருப்பது என்பது இறை நெறிகளை நாம் கடைபிடித்து அதன் பின்னே செல்லும் நல்ல செயலாகும். அறிவியல் ரீதியாகவும் ஒருநாள் விரதம் இருப்பதால் உடலுக்கு நன்மைகள் தான் உண்டாகும். ஆனால் விரதம் இருப்பவர்களின் ஆரோக்கியமும் இதில் முக்கியமானது. உடலை மீறிய விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது? யாருக்கு? எப்பொழுது? என்ன விரதம் இருக்க வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’, அது போல நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் விரதமும் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் பொழுது நம் ஆரோக்கியத்தையும் மீறிய விரதம் இருக்க நினைப்பது தவறாகும். எனவே உங்களால் முடிந்த விரதங்களை மட்டும் கடைபிடிப்பது உத்தமம். முழுமையான விரதம் இருப்பதற்கு பெயர் ‘சுத்த விரதம்’ ஆகும். இதை அனைவராலும் எளிதாக கடைபிடித்து விட முடியாது. சுத்த விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள் பழச்ச...