மகர ராசியின் அதிபதி சனி பகவானாவார். மகர ராசியில் உத்திராடம் 1, 2, 3 பாதங்களும், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். மகர ராசிகார்கள் பொதுவாக விடமுயற்சி உடையவர்கள். இவர்கள் பொறுமையாகவே எல்லா விஷயங்களையும் செய்வார்கள். இவர்கள் எப்பொழுதுமே யோசித்து கொண்டே இருப்பார்கள். மகரம் ராசி ஆண் குழந்தை / பெண் குழந்தை: உத்திராடம் (பாதம் 2,3,4) - BO, JA, JE (போ,ஜ, ஜி) திருவோணம் - JU, JAY, JO, GHA (ஜூ,ஜே,ஜோ,கா) அவிட்டம் (பாதம் 1,2) - GA, GI (க, கீ) மகர ராசிகார்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிரிகளுக்கும் உதவி தேவை என்ற நிலை வந்துவிட்டால் பகையை மறந்து உதவி செய்வார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம், துன்பம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எல்லா விஷயங்களிலும் ஆதாயம் அடைய நினைப்பார்கள். இவர்கள் சமயங்களில் நகைச்வையாளராக மாறி மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள். இவர்கள் வெகுளித்தனமான வெள்ளை மனம் கொண்டவர்கள். மகர ராசிகார்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் அதிக ...