மீனம் ராசி அன்பர்களே : உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். கௌரவ பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். தை மாதம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகளுக்காக சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இந்த சார்வரி புது வருடம் சாதனைகளை தரப்போகும் ஆண்டாக அமைந்துள்ளது. மீனம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் மீனம் ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆனி, ஆவணி, மார்கழி, தை மீனம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்: மீனாட்சி மீனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நாள்: வெள்ளி ...