கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தின் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கும். கடக ராசிக்காரர்கள் பெரியோர்களிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டிருப்பார்கள். கடவுள் பக்தி அதிகம் இருக்கும். கடகம் ராசி ஆண் குழந்தை/பெண் குழந்தை புனர்பூசம் (பாதம் 4) - HA, HI (ஹ,ஹி) பூசம் - HU, HE, HO, DA (ஹூ,ஹே,ஹோ,ட) ஆயில்யம் - DI, DU, DE, DO (டி, டு,டே,டோ) கடக ராசிக்காரகள் எதில் கைவைத்தாலும் அதை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். இவர்களுக்கு ஆளுமைத்தன்மை அதிகம் இருக்கும். பிறரை தன் பால் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஏற்று கொண்ட வேலையை முடிக்காமல் விட மாட்டார்கள். சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற வேண்டும் என விரும்புவார்கள். இவர்களால் தன் சகோதர, சகோதரிகளுக்கே லாபமே தவிர அவர்களால் இவர்களுக்கு லாபம் கிடையாது. இவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். எல்லா விஷயத்தையும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. இரக்க குணம் அதிகம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்...