Skip to main content

Posts

Showing posts with the label Nitya Kalyana Perumal Temple

நித்திய கல்யாண பெருமாள் கோவில்

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. நித்திய கல்யாண பெருமாள் கோவில் வரலாறு:  தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். நித்திய கல்யாண பெருமாள் கோவில் திறக்கும் நேரம்: காலை  -  6 மணி முதல் 12   மணி வரை, மாலை  -  3    மணி முதல் இரவு  8  மணி வரை திறந்திருக்கும்.