தல்லாகுளம் பெருமாள் கோவில் வரலாறு: மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் போது, தமது மாகலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு பின்பு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்காக, திருப்பதியில் பூஜை செய்யும் போது தாமும் தரிசனம் செய்ய வசதியாக கோயிலில் இருந்து அவரது மகால் அமைந்திருந்த பகுதி வரையிலும் வழி நெருகில் மணிகட்டி மண்டபங்களை அமைத்தார். கோயிலில் பூஜை தொடங்கிய உடன் அவரது பணியாளர்கள் முதல் மணியை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்படும். இறுதியில் மகால் அருகேயுள்ள மணி ஒலித்த பின் இங்கிருந்தே வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து விட்டு, உணவினை உண்பார். இந்நிலையில் ஒர் நாள் மணி ஒலிக்காது போக, கோபமடைந்த மன்னர் என்ன பிரச்னை என அறிவதற்காக தனது குதிரையில் மணிகட்டி மண்டபம் நோக்கிச் சென்றார்.முன்பு மாதுளை தோட்டமாக இருந்த பகுதி அருகே அவர் வந்த போது அவரது குதிரை அவ்விடத்தை விட்டு நகராமல், அங்கேயே மிரட்சி உடன் கணைத்தபடி நின்றது. அப்போது கீழே இறங்கிய மன்னர் அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஆஞ்சநே...