சிம்மம் ராசி அன்பர்களே : உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த சார்வரி ஆண்டானது உங்களுக்கு சங்கடங்களை விட சந்தோஷங்களை அதிகமாக கொடுக்கும். இந்த ஆண்டு உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக காணப்படும். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பீங்கள். தொழிலினால் நல்ல வருமானம் வரும். கடன் உதவிகள் கிடைக்கும். ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் கடன்கள் நிறைய கிடைக்கும். வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். கடன் கிடைக்கிறதே என்பதற்காக அதிகம் வாங்காதீர்கள். பொருளாதார நிலைமை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக அமையும். இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். பெரிய பதவிகள் கைக்கு வரும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உயரதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் கவனத்துடன் இருங்கள் அமைதியாக இருந்தாலே பிரச்சினைகள் ஏற்படுவதை குறைக்கலாம். விட்டுக்கொடுத்து போவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சார்வர...