மேஷ ராசி அன்பர்களே! நின்று நிதானித்துச் செயல்படவேண்டிய மாதம். புதிய முயற்சிகளில் முழு ஈடுபாடு இருந்தால் மட்டுமே சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். குடும்பத்தினர் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவர். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறி, உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் ஏற்படாது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்குச் சகோதரர்களுக்காகச் செலவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். புதிய மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அரசாங்க வகையில் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். மாதப் பிற்பகுதியில் வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அனுகூலப் பலன்கள...