தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன. தனுசு ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் நல்ல உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கவர்ச்சிகரமான உடலமைப்பை கொண்டவர்கள். தனுசு ராசி ஆண் குழந்தை / பெண் குழந்தை : மூலம் - YE, YO, BA, BI (யே,யோ,ப, பி) பூராடம் - BU, DHA, BHA, DA (பு, பூ, த,ப, ட) உத்திராடம் (பாதம் 1) - BE (பே) தனுசு ராசிகார்களிடம் தற்பெருமை அதிகம் இருக்கும். தன்னைதானே உயர்த்தி பேசிகொள்வார்கள். இவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் அவர்கள் எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு விலகி விடுவார்கள். எடுத்து கொண்ட செயல்களில் தோல்வி அடைந்தால் எளிதில் துவண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன் கூட்டியே அறிய கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும். தனுசு ராசிகார்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள், க...