தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சேலம் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலாகும். இக்கோவில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கு புகழ் பெற்றக்கோவில். இத்தலத்தில் மூலவர் கைலாசநாதர் , தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள் .
|
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் |
இக்கோவில் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. கோவில் நுழைவாயில் உள்ள கதவுகள் வேங்கை மரத்தினால் ஆனது. அதில் துருப்பிடிக்காத ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளது. இக்கதவுகளில் பெருமாள் சிலைகள் தத்துரூபமாக செதுக்கப்பட்டு பட்டுள்ளது. இந்த கோயில் 5 அடுக்கு ராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. கோவில் உள்ளே சென்றதும் நந்தியார் சிலையும் , பலிபீடமும் உள்ளது.
|
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் |
|
சிவகாமியம்மன், நவகிரகங்கள், முருகன், தாண்டவ மூர்த்தி, வீரபத்திரர், பைரவர், விநாயகர், உமா தேவி, சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு தனி கோவில் உள்ளது.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிறப்பு:
- மாசிமாதம் 9, 10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண ஏராளமான மக்கள் அன்றைத்தினம் வருகிறார்கள்.
- இரதி - மன்மதன் சிலை அமைப்பு: இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இது ராமன் வாலியை வதம் செய்த நிகழ்வை காட்டுகிறது.
|
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்-1 |
|
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்-2 |
|
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்-3 |
- உள் பிரகாரத்தில், பதால லிங்கத்திற்கான சன்னதி 3 அடி நுழைவாயிலுடன் தரையின் கீழே உள்ளது.
- இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் கோயிலின் நுழைவாயிலில் படிக்கல்லாக உள்ளது.
- யாழி தூண் (சிங்கம் மற்றும் யானையின் அம்சங்களை இணைக்கும் ஒரு புராண விலங்கு), அதன் வாயில் ஒரு கல் பந்தை (4 'விட்டம்) உருட்ட முடியும் , ஆனால் அதை வெளியே எடுக்க எடுக்கமுடியாது .
Peace full
ReplyDelete