அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று பலரால் நம்பப்படுகிறது. ஆனால், அட்சய திருதியை தங்கம் வாங்கும் நாள் மட்டும் இல்லை, நம் வாழ்வில் நீண்டநாள் நிலைக்க கூடிய மங்களகரமான பொருட்கள், சொத்துக்கள் வாங்குவதற்கும் சிறந்த நாள்.
அட்சய திருதியை என்றால் என்ன?
தமிழ் மதமான சித்திரை மாதத்தின் முதல் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் திதி நாளே அட்சய திதியை என்று சாஸ்திரம் சொல்கிறது.
‘அட்சய’ என்றால் சமஸ்கிருதத்தில் என்றும் குறையாதது என்பது பொருள். இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.
அட்சய திருதியை |
அட்சய திருதியை பெயர் காரணம்:
- அட்சய திருதியை நாளில், முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் உருவாக்கப்பட்டது.
- இம்மாதம் இந்து கடவுளான திருமாலால் ஆளப்படுபடுகிறது.
- முனிவரான பரசுராம் அட்சய திருதியை நாளில் பிறந்ததாக நம்பப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராம் அவதாரமும் ஒன்று.
- அவர், இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது.
- பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
- சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
Comments
Post a Comment