அட்சய திருதியை என்பது இந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். சித்திரை மாதத்தின் முதல் அம்மாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் என்றும் குறையாது என்று பொருள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி உத்தமமான பலன்களை தருவதாக கூறப்படுகிறது. அதிலும், சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தினம் மிகவும் உத்தமமான நாளாகவும் வாழ்வில் வளங்கள் குவிக்கும் நாளாகவும் சிறப்பித்து கூறப்படுகிறது. இதுதான் ‘அட்சய திருதியை’.
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு காரியங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அட்சய திருதியை |
Comments
Post a Comment