விருச்சிகம் ராசி அன்பர்களே :
- விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கி சேமிப்புக்கள் உயரும். குடும்பத்தில் சந்தோசமாக இருப்பீர்கள். சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் நிதானமாக இருக்கவும்.
- விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும்.
- வங்கி சேமிப்புக்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அற்புதமாக அமையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் அமையும் நீண்ட நாள் கனவுகள் நனவாகி நினைத்த காரியம் நடக்கும்.
- சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். பேச்சில் கோபத்தை குறைத்துக்கொண்டால் நல்லதே நடக்கும்.
|
விருச்சிகம் ராசி சார்வரி வருட ராசிபலன் |
விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்:
சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை, பங்குனி
விருச்சிகம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்:
கால பைரவர்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நாள்:
செவ்வாய்
Comments
Post a Comment