அட்சய திருதியை இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.
அட்சய திருதியை 2020 |
- அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையை தூய்மை படுத்தி, கோலமிட்டு அதன்மேல் ஒரு மனைப் பலகையை வைத்து அதன் மேல் வாழையிலை ஒன்றினை இடுங்கள்.
- இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி சில நாணயங்களை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி சில காசுகளை போட்டு மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள்.
- கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள்.
- பால் ஒரு டம்ளரில் வையுங்கள்.
- தண்ணீர் ஒரு டம்ளரில் வையுங்கள்.
- தேங்காய் , வாழைப்பழம், வெற்றிலை மற்றும் பாக்கு , பழங்கள் வையுங்கள்.
- அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை போன்ற மலர்களால் பூஜிப்பது சிறப்பானது.
- கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள்.
- பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள்.
- புதிதாய் வாங்கிய பொருட்கள் அல்லது அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை கலசத்தின் முன்பாக வையுங்கள்.
- முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள்.
- இதுவே அட்சய திருதியை பூஜை செய்யும் முறை.
Comments
Post a Comment