பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால் திருமணம் தள்ளிபோகுமோ அல்லது தடை ஏற்படுமோ என்று பெற்றோர்களுக்கு ஒரு பயம் இருக்கும். நவகிரகங்களில் ஒன்றான அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கின்றது.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?
செவ்வாய் பகவான், ஒருவரின் ஜாதக கட்டத்தில், லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்.
|
Chevvai Dosham |
செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சரியாக இல்லையென்றால் , தம்பதியருக்குள் சண்டைகள், பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. செவ்வாய் பகவான், ரத்த சம்பந்தமானவர். செவ்வாய் தோஷம் இருக்கும் போது ஒரு மனிதனின் குணங்களும், உடம்பில் இருக்கக்கூடிய ரத்தம் சார்ந்த விஷயங்கள் செவ்வாய் அமைந்துள்ள இடத்தை வைத்து நாம் தெரிந்துகொள்ள முடியும். அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது ஒருபக்கம் சரி.
Comments
Post a Comment