கும்பம்  ராசி அன்பர்களே :
- சார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. என்னதான் ஏழரை சனியில் விரைய சனி, விரைய குரு என்றாலும் உங்களுக்கு லாபங்களை அள்ளித்தரப்போகிறது. ராஜயோகத்தை தரப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது. 
 - முன்னேற்றங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பு அதிகமாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 
  - உங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த பிச்சினைகள் தீரும். சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 - குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். நீங்க நினைத்தது நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். குழந்தைக்காக தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.
 - நோய் பாதிப்பு பற்றிய அச்சம் நீங்கும். ஏழரை சனியால் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அது விரைவில் தீரும்.
|  | 
| கும்பம் ராசி சார்வரி வருட ராசிபலன் | 
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்:
சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை, மார்கழி
கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்:
ஆஞ்சநேயர்
கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நாள்: 
சனிக்கிழமை   
 
 
Comments
Post a Comment