மேஷ ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக மேஷ ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வளர்ச்சியையும், உங்கள் வாழக்கை நகர்த்த காரணமாக இருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அது சிறக்கும்.
சுய தொழில் தொடங்க திட்டம் வைத்துள்ளவர்களுக்கு, தொழில் தொடங்க உகந்த காலமாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை நிச்சயம் பெறலாம் என்பதால், எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் தொடங்கலாம்.
சனிப்பெயர்ச்சியை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி?: அஷ்டமத்து சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டமச் சனி என்றால் என்ன? பரிகாரம் இதோ
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
சனியின் பார்வை மேஷ ராசிக்கு 12ம் இடத்தில் விழுவதால் ஆன்மிக பற்று அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு, காதல் உறவில் கவனம் தேவை.
வரக்கூடிய இரண்டரை ஆண்டுக்காலம் அற்புதமாக இருக்கும் என்பதால் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேஷம் சனி பெயர்ச்சி 2020 – 2023 |
Comments
Post a Comment