துலாம் ராசி அன்பர்களே!
பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய மாதம். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அடுத்தடுத்து பிரச்னைகள் வந்தாலும் தெய்வ அனுகிரகத்தால் சுலபமாகச் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைப்பதுடன், அவர்களில் சிலரால் சங்கடங்களும் ஏற்படக்கூடும். சிலருக்கு உஷ்ணம் தொடர்பான ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும்.
பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். மாதப் பிற்பகுதியில் பிள்ளைகளால் ஏற்படும் தேவையற்ற பிரச்னைகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
மேலும் செரிமானப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். வெளியில் செல்ல நேரிடும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
மாத முற்பகுதியில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுடன் சுமுகமான சூழ்நிலை ஏற்படும். மாதப் பிற்பகுதியில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளுடன் மோதல் போக்கு வேண்டாம். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.
பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பத்தின் மதிப்பும் மரியாதை யும் அதிகரிக்கும். வீட்டில் இருந்தபடி அலுவலக வேலைகளைப் பார்க்கும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: ஏப்ரல் 20, 21, 22, 23, 24, மே 1, 2, 3, 7, 8, 9
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 15, 16 மே 12, 13
பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வதும், பிரதோஷத்தன்று நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மைகளைத் தரும்.
Comments
Post a Comment