ரிஷப ராசி அன்பர்களே!
பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும்.
குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களுடன் வீண் விரோதம் வரக்கூடும்.
மாதப் பிற்பகுதியில் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.
சகோதர வகையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யவும். தந்தைவழி உறவினர்களால் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். மாதப் பிற்பகுதியில் எதிரிகளால் இடையூறுகள் ஏற்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பிற்பகுதியில் வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலையே காணப்படும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.
ஷபெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. கணவரின் அன்பும் ஆதரவும் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்டம் தரும் நாட்ள்கள்: ஏப்ரல் 20, 21, 22, 27, 28, மே 7, 8, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
சந்திராஷ்டம நாட்கள்: மே 1, 2
பரிகாரம்: விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.
Comments
Post a Comment