கும்பராசி அன்பர்களே!
இந்த மாதம் முழுவதும் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுகமாகக் காணப்படும். குடும்பத்தோடு இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோ சனை மிகுந்த முக்கியத்துவம் பெறும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். அரசாங்க அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
வியாபாரம் வழக்கம்போல் நடைபெற்றாலும் வீண் விரயங்களும் ஏற்படும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும் என்பதால் சற்று கவனமாக நடந்துகொள்ளவும். பணியாளர்களுக் காக செலவு செய்யவேண்டி வரும்.
பணியாளர்கள் பணியில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாதத் தொடக்கத்தில் வேலையில் கவனமாக இருக்கவும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திடீர் வருமானத்துக்கு வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 16, 19, 20, 21, 30 மே 8, 9, 10, 11, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4
சந்திராஷ்டம நாள்கள்: மே 4, 5
பரிகாரம்: துர்கை வழிபாடும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வீட்டிலேயே அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
Comments
Post a Comment