மகர ராசி அன்பர்களே!
எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை.
அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். சிலருக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும்.
தேவையில்லாத சகவாசத்திலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். நீண்டநாள்களாக நிறை வேற்ற முடியாமல் போன தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.
\தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி வரும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டியாளர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வீட்டு வேலைகளில் கணவர் மற்றும் பிள்ளைகளின் உதவி உற்சாகம் தரும். பெற்றோர் வீட்டில் இருந்து எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: ஏப்ரல் 17, 18, 19, 20, 21, 27, 28, 29, 30 மே 3, 4, 5 8, 9
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 22, 23, 24 முற்பகல் வரை
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, மகிழ்ச்சி பெருகும்.
Comments
Post a Comment