மிதுன ராசி அன்பர்களே!
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும்.
சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணவரவு தேவைக்கும் சற்று அதிகம் கிடைப்பதால் செலவுகள் போக சிறிது சேமிக்கவும் முடியும்.
மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் - மனைவி இருவருக்குமிடையே மனவருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மாதப் பிற்பகுதியில் தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கவும், அவர்கள் மூலம் பொருளாதாரரீதியாக நல்ல திருப்பம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர்களுடன் கனிவான அணுகுமுறை மிகவும் அவசியம். பற்று வரவில் பிரச்னை எதுவும் இல்லை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக் கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவர் நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: ஏப்ரல் 14, 22, 23, 24, 29, 30, மே 8, 9, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
சந்திராஷ்டம நாட்கள்: மே 3, 4
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
Comments
Post a Comment