ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார். ரிஷப ராசியில் கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவரும் வண்ணம் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நல்ல கம்பீரமான தோற்றமும், நடுத்தரமான உயரமும் கொண்டவர்கள்.
ரிஷபம் ராசி ஆண் குழந்தை/பெண் குழந்தை
கார்த்திகை (பாதம் 2,3,4) - E, U, AI (இ, உ, ஊ, எ,ஏ)
ரோகிணி - O, VA, VI,VU (ஒ, வ,வி, உ, ஊ)
மிருகசீரிடம் (பாதம் 1,2) - VE,VO (வே,வோ)
ரிஷப ராசிகாரர்கள் சாமர்த்தியமாகவும், வேடிக்கையாகவும் பேசுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். பொதுவாக கூச்ச சுபாவமுடையவர்கள். ஆபார ஞாபக சக்தி கொண்டவர்கள். எப்போதும் சுத்தமாக இருக்க விரும்புவார்கள். கஷ்டம் வந்துவிட்டால் அதைதாங்க கூடிய பொறுமையும், சகிப்புதன்மையும் கொண்டிருப்பார்கள்.
எல்லோரையும் அனுசரித்து செல்வார்கள். அன்னையின் மேல் மிகுந்த அன்பை கொண்டிருப்பார்கள். யாரையும் தேவையில்லாமல் பகைத்து கொள்ள மாட்டார்கள். இயற்கையான சூழ்நிலையை அதிகம் விரும்புவார்கள். சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். இவர்களில் பெரும்பலோனருக்கு திருமணம் சிறிது காலம் தாழ்ந்துதான் நடைபெறும்.
ரிஷப ராசிகாரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். கலைத்துறை, மற்றும் இசைத்துறையில் நாட்டம் அதிகம் இருக்கும். இவர்கள் மத்திய வயதில் தான் சுக போகமான வாழ்வு அமையும். இவர்கள் மற்றவர்களுக்கு வழிய உதவி செய்வதால் சில சமயங்களில் பிரச்சனைகளில் சிக்கி கொள்வார்கள்.
Comments
Post a Comment