மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானாவார். மிதுன ராசியில் மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இவர்கள் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதை துல்லியமாக எடைபோட்டு நீதி வழங்குவார்கள். இவர்கள் யாருடைய துணையும்மின்றி தனியாக வாழ விரும்புவார்கள்.
மிதுனம் ராசி ஆண் குழந்தை/பெண் குழந்தை
மிருகசீரிஷம் (பாதம் 3,4) - KA,KI (கா, கி)
திருவாதிரை - KU, GHA, JNA, CHA (கு, க,ச, ஞ)
புனர்பூசம் (பாதம் 1,2, 3) - KE, KO (கே,கோ)
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்வார்கள். சோம்பேறித்தனமாக இருக்க விரும்ப மாட்டார்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்கள் குணத்தை மாற்றி கொள்வார்கள். இவர்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே இவர்களை பற்றி புரிந்து கொள்ள முடியும். பழகுவதற்கு சற்று கடினமானவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபக சக்தி இருக்கும். எதையும் சொன்ன அல்லது கேட்ட மாத்திரத்தில் அதை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
பார்பதற்கு கோமாளி போல காணப்பட்டலும் தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளவதில் வல்லவர்கள். பிறரை கிண்டல், கேலி பரிகாசம் செய்து அவர்களை அழ வைப்பதில் கில்லாடிகள். இவர்களுக்கு பேச்சாற்றல் அதிகம் இருக்கும். சமூக மற்றும் பொது வாழ்வில் ஈடுபாட்டோடு இருப்பார்கள். கலை, மற்றும் இசைத்துறையில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் ஆடம்பரமாக வாழ்வதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். எல்லா சுகங்களையும் பெற்று சுக போகமாக வாழ விரும்புவார்கள்.
மிதுன ராசிகார்கள் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் அதை செலவு செய்து விடுவார்கள். இவர்கள் எதிலும் அவசரமாக முடிவு செய்து பின்பு சிக்கலில் மாட்டி கொள்வார்கள். கடின உழைப்பை தவிர்த்து புத்திசாலிதனமான வேலையையே தேர்ந்தெடுப்பார்கள்.
Comments
Post a Comment